லண்டனில் குரங்கு-அம்மை நோய் தொற்று- இந்த வைரஸ் வேறு தற்போது பயமுறுத்த ஆரம்பித்துள்ளது !

இந்த செய்தியை ஷியார் செய்ய

நைஜீரியா நாட்டுக்குச் சென்று , லண்டன் திரும்பிய நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்றியுள்ளது. இந்த வரைஸ் பலரை தாக்க வல்லது என்றும். இது உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய அம்மை நோய் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள். லண்டனில் உள்ள சென் தொமஸ் வைத்தியசாலையில், குறித்த நபரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, வைத்தியர்கள் பராமரித்து வரும் நிலையில். இன் நபர் நைஜீரியாவில் இருந்து லண்டன் வந்த வேளை, இவருடன் கூட பயணித்த பயணிகள் தொடர்பான பட்டியலை பொலிசார் எடுத்து, தேடுதல் நடத்தி வருகிறார்கள். இந்த குரங்கு அம்மை நோய் லண்டனில் பரவ வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தற்போது கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.


இந்த செய்தியை ஷியார் செய்ய