மாஸ்கோ: டூர் போனோமா, போட்டோ எடுத்தோமா என்று இல்லாமல் ஏடாகூட வேலையில் இறங்கிவிட்டார் ஒரு பெண் பிரபலம்.. கடைசியில் கோர்ட் கேஸ் வரை செல்லும் நிலைமை வந்துவிட்டது..!
இந்தோனேசிய தீவுக்கூட்டம் என்பது அதன் கலாச்சாரங்கள், நிலப்பரப்புகள், சிறப்புதன்மைகள் குறித்து சொல்லப்படாத எத்தனையோ பொக்கிஷங்களை வைத்திருக்கும் தீவுகளின் தொகுப்பாகும்.
கிட்டத்தட்ட 13,500 தீவுகள் அதன் அதிகார வரம்பில் உள்ளன.. இந்தோனேசியா தீவுகளின் எல்லை இந்தியப் பெருங்கடலில் இருந்து பசிபிக் கடல் வரை பரவி கிடக்கிறது..
இந்தோனேசியா எல்லா வயதினருக்கும் முழுமையான வாழ்நாள் முழுமைக்கும் பயணங்களுக்கு சரியான இடமாகும். இப்படிப்பட்ட இடத்துக்குதான் ஒரு பெண் சுற்றுலா சென்றார்.. ரஷ்யாவை சேர்ந்தவர் அந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்.. பெயர் அலினா பஸ்லீவா.. இவர் தன்னுடைய கணவருடன் இந்தோனேசிய தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அங்குள்ள பாலி தீவுகளுக்கும் கணவருடன் சென்றார்.. அங்கு காணப்பட்ட அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சம் மலைகள், மரங்கள் போன்றவற்றை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்.
அதுமட்டுமல்ல, அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்தார்.. இந்த பதிவு வைலானதையடுத்து, பாலியை சேர்ந்த மக்கள் கண்ணிலும் இந்த பதிவு பட்டது.. உடனே ஆத்திரமடைந்த அவர்கள், தங்களின் நம்பிக்கை உணர்வுகளை, அலினா அவமானப்படுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டினர்.. அந்த தீவில் உள்ள மரங்கள், மலைகள் போன்ற இயற்கைதான் இந்த மக்களின் கடவுளாக பார்க்கப்படுகிறது..
அப்படி கருதப்படும் இடத்தில் நிர்வாணமாக நின்றது அம்மக்களுக்கு கொதிப்பை தந்ததுடன், அலினா தம்பதியை அங்கிருந்து ஒரு அதிகாரி வெளியேற்றும்படி ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல, இந்தோனேசியாவில் 6 மாசத்துக்கு கால் வைக்ககூடாது என்றும், உள்ளூர் மக்கள் புனிதமாகக் கருதும் அந்த இடத்தை தூய்மை செய்யும் பணியில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.