இலங்கையில் தற்போது அவசரகால சட்டம் ஏன் என பல நாடுகள் கேள்வி எழுப்பி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கை தொடர்பாக உண்ணிப்பாக கவனித்து வருவதோடு. கோட்டபாய நேற்று முன் தினம் அறிவித்துள்ள அவசரகால சட்டத்தை கடுமையா விமர்சித்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்க அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில். தற்போது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளும் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கை தொடர்பாக எச்சரிக்கை விடுக்க கூடும். இதனால் விடுமுறைக்கு இலங்கை செல்லும் உல்லாசப் பயணிகள் எண்ணிக்கை பெரிய அளவில் வீழ்ச்சி அடையலாம் என்று கூறப்படுகிறது.