ஸிலன்ஸ்கி அணியும் ஜாக்கெட் £90,000 ஆயிரத்திற்கு விற்பனை: அதனையும் ஆயுதமாக மாற்றி சண்டையிடுகிறார் !

இந்த செய்தியை ஷியார் செய்ய

உக்கிரைன் ஜனாதிபதி ஸிலான்ஸ்கி அடிக்கடி அணியும், பச்சை நிற ஜாக்கெட்டை, பிரித்தானியாவில் உள்ள ஏலம் விடும் நிலையம் ஒன்று 90,000 ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்றுள்ளது. அத்தோடு உக்கிரைன் நாட்டுக்கு நிதி சேர்க்கும் இந்த நிகழ்வில் மேலும் பல்லாயிறம் பவுண்டுகள் நிதி சேர்கப்பட்டுள்ளது. தனது ஜாக்கெட்டை விற்று அந்தப் பணத்தில் கூட ஆயுதங்களை வாங்கி, ரஷ்யாவுக்கு எதிராக யுத்தம் செய்வேன். எனது நாட்டின் விடுதலையே எனக்கு முக்கியம் என்று, ஸிலான்ஸ்கி தெரிவித்துள்ளார். சும்மா இருந்த உக்கிரைன் நாட்டோடு சொறியப் போய், பெரும் இழப்புகளை சந்தித்தது மட்டுமல்லாது. ரஷ்யா உக்கிரைன் அதிபரை உலகத் தலைவர் ரேஞ்சுக்கு உயர்த்தி விட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி , அல்லது பிரித்தானிய பிரதமர் அணியும் ஜாக்கெட் கூட இந்த விலைக்கு போகுமா என்று தெரியவில்லை போங்கள்.


இந்த செய்தியை ஷியார் செய்ய