நெதர்லாந்தில் பயங்கரம்…. விவசாயப்பண்ணையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்… இருவர் உயிரிழப்பு…!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

நெதர்லாந்து நாட்டின் அல்ப்லாசர்டாம் என்ற பகுதியில் இருக்கும் ஒரு விவசாய பண்ணையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.

எனவே, அங்கிருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும், அவர் துப்பாக்கிசூடு தாக்குதலை நிறுத்தவில்லை. இதில் 16 வயதுடைய சிறுமி உட்பட இருவர் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒரு சிறுவனுக்கும், இளம் பெண்ணிற்கும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிவிட்டார்.

எனவே, பலத்த காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய நபரை தீவிரமாக தேடி வந்தனர். அதனைத்தொடர்ந்து விவசாய பண்ணைக்கு அருகே இருக்கும் பூங்காவில் மறைந்திருந்த அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விட்டனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த செய்தியை ஷியார் செய்ய