மகிந்த கூலிப் படையின் கைகளில் புகைப்படம்: அதனைப் பார்த்து பார்த்து தான் தாக்குதல் நடத்தினார்கள் !

இந்த செய்தியை ஷியார் செய்ய

இதுவரை காலமும் காலி முகத்திடலில் மையம் கொண்டு இருந்த போராட்டம், சற்று முன்னர் நாடு தழுவிய ரீதியில் பல இடங்களில் பரவியுள்ளது. இதனை அடக்க வட கிழக்கில் உள்ள ஒரு பகுதி ராணுவத்தை தென்னிலங்கைக்கு இடம்மாற்ற முனைகிறார் சர்வேந்திர சில்வா. பலாலி ராணுவ முகாமில் இருந்து பல ராணுவத்தினர் தென்னிலங்கை நோக்கி நகர்த்தப்படுவதாக, யாழில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன். இது இவ்வாறு இருக்க நாட்டில் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் வெடித்துள்ள காரணத்தால், எல்லா தொலைக் காட்சி நிலையங்களும் இந்த போராட்டங்களை தான் மும்மரமாக காட்டி வருகிறது. மகிந்தவால் அனுப்பப்பட்ட கூலிப்படையின் தாக்குதலை அடுத்தே…

இந்த எழுச்சி சிங்கள மக்களுக்கு மத்தியில் தோன்றியுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக இலங்கையில் இன்னும் சில மணி நேரத்தில் பெரும் நெருக்கடிகள் தோன்றக் கூடும். இது போக மகிந்தவால் அனுப்பப்பட்ட கூலிப்படைக்கு பிரியாணி குவாட்டர் சாராயம், கொடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளது. இவர்கள் கைகளில் போராட்டம் நடத்தும் முக்கிய நபர்களின் புகைப்படம் இருந்துள்ளது. இதனால் கூலிப்படைகள் தம் கைகளில் இருந்த படங்களை பார்த்துப் பார்த்து, தான் போராட்டக் காரர்களை தாக்கியுள்ளார்கள் என்றும் மேலும் அதிர்வு இணையம் அறிகிறது.


இந்த செய்தியை ஷியார் செய்ய