மொட்டு கட்சியின் MP பொது மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்- ருயிட்டர்ஸ் செய்திச் சேவை

இந்த செய்தியை ஷியார் செய்ய

மகிந்தவின் பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர், மற்றும் MPயுமான அமர கீர்த்தி பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது துப்பாக்கி சகிதம் மக்களை மிரட்ட ஆரம்பித்தவேளை, பொது மக்கள் கூடி அவரை சரமாரியாக தாக்கியதில். அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இவை அனைத்திற்கும் காரணம் இன்று மகிந்த தனது பவரைக் காட்ட, ஹம்பாந்தோட்டையில் இருந்து பல நூறு கூலிப்படைகளை கொழும்புக்கு கொண்டு வந்தது தான். இந்த ஐடியாவை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளறி விட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மகிந்தவின் ஆதரவாளர்கள் உறவினர்களின் வீடுகளை மக்கள் நெருப்பிட்டு வருகிறார்கள். இதேவேளை

பொதுஜன பெரமுன கட்சியின் அனைத்து அலுவலகங்களும் அடித்து நொருக்கப்பட்டு வருகிறது என்று அதிர்வு இணையம் அறிகிறது. போராடும் மக்கள் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பதனை மக்கள் முறையாக உணர்த்தியுள்ளார்கள். இது இவ்வாறு இருக்க, கோட்டபாய டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.


இந்த செய்தியை ஷியார் செய்ய