எலான் மஸ்க் – ஒருவேளை மர்மமான முறையில் நான் இறந்துவிட்டால்….? பரபரக்கும் ட்விட்டர்…!

இந்த செய்தியை ஷியார் செய்ய

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கும் எலான் மஸ்க் தனது மரணம் பற்றி சர்ச்சை கருத்து ஒன்றை ட்விட் செய்து இருக்கஇறார். ட்விட்டரில் அதிரடி பதிவுகளுக்கு பெயர் பெற்றவர் எலான் மஸ்க். நீண்ட காலமாகவே இவரின் ட்விட்களில் பெரும்பாலானவை நக்கல், நையாண்டி மற்றும் நறுக் கேள்விகளை உள்ளடக்கியதாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை அவர் பதிவிட்டு இருக்கும் ட்விட்-இல், “மர்மமான முறையில் நான் இறந்திருந்தால், அறிந்து இருந்ததில் மகிழ்ச்சி.” என குறிப்பிட்டு இருக்கிறார்.

முன்னதாக உக்ரைனிற்கு ஸ்டார்லின்க் செயற்கைக் கோள் மூலம் தகவல் தொடர்பு வசதிகளை எலான் மஸ்க் வழங்கி வருவதற்கு, அவர் தான் முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என கூறும் அறிக்கையை எலான் மஸ்க் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார். அதில், “உக்ரைன் நாட்டின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத் தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் வழங்கி இருக்கிறார். உங்களின் முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த வகையில், உக்ரைன் அரசுக்கு எலான் மஸ்க் உதவி செய்து வருவதை அடுத்து ரஷ்ய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்து இருக்கலாம். இதன் காரணமாகவே எலான் மஸ்க் மர்ம மரணம் குறித்த பதிவை தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட்டு வரும் உக்ரைன் நாட்டுக்கு எலான் மஸ்க் தனது ஸ்டார்லின்க் செயற்கைகோள் மூலம் இணைய சேவையை வழங்கி வருகிறார்.

எலான் மஸ்க்-இன் மர்ம மரணம் குறித்த ட்விட்டர் பதிவுக்கு பல்வேறு நெட்டிசன்கள் அதிர்ச்சி தெரிவித்து, அவருக்கு ஆதரவான கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறான பதிவுகளில் சிலர், “டெஸ்லா சி.இ.ஒ. உலகை சீர்திருத்தம் செய்வதற்கு தேவை. நீங்கள் உயிரிழக்க மாட்டீர்கள். சீர்திருத்தம் செய்ய இந்த உலகிற்கு நீங்கள் அவசியம் தேவை,” என பதிவிட்டு உள்ளனர்.

“மனித குலம் உங்களையே நம்பி இருக்கிறது,” என மற்றொரு நபர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு நபர், மர்மம் குறித்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என விளக்குமாறு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய