கொழும்பி இருந்து லண்டன் ஓடிய யோசித: இதனால் ஏர் போட் செல்லும் வாகனத்தை சோதனையிடும் பொது மக்கள் !

இந்த செய்தியை ஷியார் செய்ய

கொழும்பில் நட்சத்திர விடுதி ஒன்றில் பாதுகாப்பாக தங்கியிருந்த மகிந்தவின் 2வது புதல்வர் யோசித, நேற்றைய தினம்(09) லண்டன் பறந்து விட்டார் என அறியப்படுகிறது. யோசிதவின் மனைவி பிரித்தானிய கடவுச்சீட்டைக் கொண்டவர் என்பது ஊர் அறிந்த விடையம். இன் நிலையில் அவர் லண்டனுக்குச் சென்று விட்டார். இதேவேளை இந்த விடையத்தை அறிந்த பொது மக்கள், தற்போது கட்ட நாயக்க ஏர் போட் செல்லும் வாகனங்களை மறித்து, சோதனை செய்து வருவதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. போராட்டக் காரர்கள் ஆங்காங்கே நின்று வாகனங்களை மறித்து சோதனை செய்து வருகிறார்கள். இதனால் தற்போது ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்கள், தூரத்து உறவுகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வது என்பது, சிக்கலாக மாறியுள்ளது.


இந்த செய்தியை ஷியார் செய்ய