69 வயதாகும் புட்டினின் உடல் நிலையைக் காட்டிக் கொடுத்த கம்பளி: காலை மட்டும் ஏன் கவர் பண்ணினார் ?

இந்த செய்தியை ஷியார் செய்ய

பல வருடங்களாக ரஷ்யாவை ஆட்சி செய்து வரும் விலாடுமிர் புட்டினுக்கு வயது 69. அவர் மிகவும் திடகாத்திரமாக இருப்பதாக அடிக்கடி TVல் காண்பிக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல என்ற பல ஊடகங்கள் தெரிவித்து வருகிறது. அவரால் குளிரை தாங்க முடியாது என்றும். கால்களில் தீராத வியாதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவை எதனையும் நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைத்தது இல்லை. ஆனால் 9ம் திகதி அன்று, ரஷ்யாவில் நடந்த போர் வெற்றி விழாவில் கலந்து கொண்ட புட்டின் சற்று நேரம் கூட நிற்கவில்லை. நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஆசனத்தில் அமர்ந்து விட்டார். அது போக கால்களை ஒரு கம்பளி கொண்டு போர்த்தியும் இருந்தார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.


இந்த செய்தியை ஷியார் செய்ய