துமிந்த சிங்கப்பூர் ஏலைன்ஸ் (SQ-469) மூலம் நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டார்- புகைப்படம் இணைப்பு !

இந்த செய்தியை ஷியார் செய்ய

ராஜபக்ஷர்களின் மிக நெருங்கிய சாகாவும், வீடமைப்பு திட்ட அதிகார சபையின் தலைவருமான துமிந்த சில்வா கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்றுவிட்டார். இவர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலக 2 தினங்களுக்கு முன்னரே சிங்கப்பூர் சென்றுவிட்டார். கடந்த 7ம் திகதி இவர் கட்ட நாயக்க விமான நிலையத்தில் உள்ள, பிசினஸ் கிளாஸ் வரிசை ஊடாக, சிங்கப்பூர் ஏலைன்ஸ் விமானம்(SQ-469) மூலம் பயணித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.  பொதுவாக வெளிநாடு செல்லும்

இவர்களைப் போன்ற அரசியல் வாதிகள், தாம் எந்த நாட்டுக்குச் செல்கிறோம் என்பதை மறைப்பதற்காக முதலில் சிங்கப்பூர் அல்லது டுபாய் சென்று. பின்னர் அங்கிருந்து தாம் செல்லவேண்டிய நாட்டுக்குச் செல்வது வழக்கம். இதனைத் தான் துமிந்தவும் செய்துள்ளார் என்கிறார்கள் விடையம் அறிந்த வட்டாரத்தினர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய