முதல் தோட்டா தவறிய நிலையில் இரண்டாவது தோட்டா பாய்ந்தது! ஒருதலைக்காதல் பயங்கரம்

இந்த செய்தியை ஷியார் செய்ய

 

இளம் பெண்ணை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் இளைஞர். ஒருதலைக்காதலால் இந்த பயங்கரமானது நிகழ்ந்திருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டத்தில் தாடிபத்ரி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாலபாட்டி சுரேஷ் ரெட்டி. இவர் காவியா ரெட்டி என்கிற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

மாலபாட்டி சுரேஷ் ரெட்டி பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் காவியா புனேவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக காவ்யாவை மாலபாட்டி சுரேஷ் ரெட்டி ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார் . இதற்கு காவியா சம்பந்தம் தெரிவித்ததாக தெரியவில்லை .இந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் மாலபாட்டி சுரேஷ் ரெட்டி, காவியா இருவரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் காவியாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அவரின் பெற்றோர்களிடம் சென்று பெண் கேட்டிருக்கிறார் மாலபாட்டி சுரேஷ் ரெட்டி. அதற்கு காவியாவின் பெற்றோரும், காவியாவும் விருப்பம் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார்கள்.

அதே நேரம் காவியாவிற்கு அவரின் பெற்றோர் வேறு இடத்தில் வரன் பார்த்து வருவதை அறிந்த மாலபாட்டி சுரேஷ் ரெட்டி ஆத்திரம் அடைந்திருகிறார். இதனால் அவர், துப்பாக்கியுடன் காவியா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது காவ்யாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டிக்கிறார். இதில், முதல் தோட்டா தவறிய நிலையில் இரண்டாவது தோட்டா காவியாவின் உடலில் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்திருக்கிறார்.
அதன்பின்னர் சுவர் ஏறி குதித்து ஓடிய மாலபாட்டி சுரேஷ் ரெட்டி தொலைவில் சென்றதும் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய