திருமணமான பின்னரும் காதலனை மறக்க முடியாத பெண்ணால் கணவருக்கு நேர்ந்த கதி

இந்த செய்தியை ஷியார் செய்ய

 

திருமணத்திற்கு பின்னரும் காதலனை மறக்க முடியாத பெண்ணால் கணவருக்கு நேர்ந்தது கதி சித்தி பேட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணமான ஒரு மாதத்திலேயே அந்த இளைஞர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்.

தெலுங்கானா மாநிலத்தில் சித்தி பேட். இந்த பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சந்திரசேகர். இவருக்கு கடந்த மார்ச் மாதம்23ம் தேதி அன்று 19வயதான சியாமளா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. இதை அடுத்து கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அன்று அவர் காரில் சென்ற போது மரணம் அடைந்திருக்கிறார். தனது கணவருடன் காரில் கோயிலுக்கு சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மரணம் அடைந்து விட்டதாக சியாமளா உறவினர்களிடம் சொல்லி இருக்கிறார். திருமணம் நடந்து 36 நாட்களே ஆகி இருந்த நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி இன்று சந்திரசேகர் மரணம் அடைந்திருக்கிறார் .

சந்திரசேகரின் தாயாருக்கு சியாமளா சொன்னதில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சியாமளாவை துருவித்துருவி விசாரணை நடத்தியதில் கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமார் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார் சியாமளா. ஆனால் பெற்றோர் சிவகுமாருக்கு தங்கள் மகள் சியாமளாவை திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளனர். அதனால்தான் சந்திரசேகர் என்பவருக்கு மார்ச் 23ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்திற்கு பின்னரும் சியாமளா சிவகுமாருடன் தொடர்பிலே இருந்திருக்கிறார். அவரை பிரிய முடியாமல் தவித்திருக்கிறார். இதற்கு இடையூறாக இருந்த சந்திரசேகரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன்படி கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று சந்திரசேகருக்கு உணவில் எலிமருந்தை கலந்து கொடுத்து இருக்கிறார் சியாமளா. ஆனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சையில் குணமடைந்திருக்கிறார் சந்திரசேகர்.

இதன் பின்னர் சந்திரசேகரை எப்படி கொலை செய்யலாம் என்று சிவகுமாருடன் ஆலோசனை நடத்தியதில் அடித்துக் கொன்று விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். அதன்படி கோயிலுக்கு போகலாம் என்று கணவரை அழைத்து இருக்கிறார் சியாமளா. இருவரும் காரில் கோயிலுக்கு சென்ற போது வழியில் சியாமளாவின் காதலன் சிவக்குமார் அவரது அவரது நண்பர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

சந்திரசேகரின் கார் வந்ததும் காரை மறித்து இருக்கிறார்கள். காரை விட்டு இறங்கியதுமே சந்திரசேகரரை கொடூரமாக அடித்து தாக்கியிருக்கிறார்கள். சியாமலாகவும் இதற்கு உதவி செய்திருக்கிறார். சந்திரசேகர் உயிரிழந்ததும் நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக நாடகமாடியது விசாரணையில் உண்மைகள் தெரிய வந்ததை அடுத்து சியாமளா அவரது காதலன் சிவக்குமார் அவரது நண்பர்கள் ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய