“21 வருடம் பெண்ணின் பிணத்தை வைத்து கொண்டு ..”ஒரு தாத்தாவின் வினோதமான வேலையை பாருங்க

இந்த செய்தியை ஷியார் செய்ய

 

\தாய்லாந்து நாட்டைச் சேர்த்தவர் சார்ன் ஜன்வாட்சகல். முன்னாள் ராணுவ மருத்துவ உதவியாளரான இவர் தனது சின்னஞ்சிறிய வீடே உலகம் என மனைவியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.இந்நிலையில் அந்த நபரின் மனைவி 21 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .அதன் பின்னர் அவர் மனைவியின் பிணத்தை அடக்கம் செய்யாமல் அந்த பிணத்தை ஒரு சவப்பெட்டியில் வைத்து கொண்டு அதனுடன் வாழ்ந்து வந்தார் .

இது பற்றி அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமலிருந்த இந்த விஷயம் சமீபத்தில்தான் தெரிய வந்துள்ளது ,அதனால் அங்கிருந்தவர்கள் ஒரு அறக்கட்டளைக்கு இது பற்றி தகவல் கூறியதும் அந்த அறக்கட்டளையினர் அந்த தாத்தாவுக்கு உதவி செய்ய முன்வந்தனர் .பின்னர் அறக்கட்டளை அந்த தாத்தாவுக்கு சாப்பாடு கொடுத்து காப்பற்றினர்

இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, அறக்கட்டளை நிர்வாகிகளின் உதவியுடன் சார்ன் தனது மனைவிக்கு இறுதி சடங்கை செய்திருக்கிறார்.


இந்த செய்தியை ஷியார் செய்ய