“வீட்டுக்கு கூட்டி போறேன்னு ,இருட்டுக்கு கூட்டி போறீங்களே” – பெண்ணுக்கு “லிப்ட்’ கொடுத்து போலீசால் நடந்த கொடுமை

இந்த செய்தியை ஷியார் செய்ய

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் 49 வயதான ஒருவர் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் அலிகார் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது, அந்த காவலர் அந்த வழியாக வந்த 16 வயது சிறுமி ஒருவரிடம், வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி தனது பைக்கில் அவரை அழைத்து சென்றார். அந்த பெண்ணும் அவர் போலீஸ்தான் தன்னை பாதுக்காப்பாக வீட்டில் கொண்டு விடுவார் என்று நம்பி அவரின் பைக்கில் சென்றார் .பின்னர் அந்த போலீஸ் அந்த பெண்ணை வீட்டிற்கு கூட்டி போகாமல் ஒரு இருட்டான பகுதிக்கு கூட்டி சென்று கதற கதற அப்பெண்ணை கற்பழித்தார் .

பின்னர் அப்பெண்ணை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார் .அதன் பிறகு அப்பெண் மெல்ல நடந்து தன் வீட்டிற்கு சென்று தனக்கு போலீசால் நேர்ந்த கொடுமை பற்றி கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியான அவரின் பெற்றோர் அந்த போலிஸ் மீது அங்குள்ள காவல் துறை உயரதிகாரியிடம் புகார் கூறினர் .பின்னர் போலீசார் அந்த கான்ஸ்டபிள் மீது வழக்கு பதிந்து அவர் வேலையிலிருந்து சஸ்பண்ட் செய்தனர் .அடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்


இந்த செய்தியை ஷியார் செய்ய