5IN1_WORLD | ரஷ்ய தூதர் மீது சிவப்பு சாயம் வீசிய போராட்டக்காரர்கள் : வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!

இந்த செய்தியை ஷியார் செய்ய

போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த ரஷ்யாவின் வெற்றிதினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய தூதர் மீது எதிர்பாளர்கள் சிவப்பு சாயம் வீசினர்.

போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த ரஷ்யாவின் வெற்றிதினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய தூதர் மீது எதிர்பாளர்கள் சிவப்பு சாயம் வீசினர்.

இரண்டாம் உலகப்போரில் நாஜி படைகளுக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 9-ம் தேதியை ரஷ்யா வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. அதன்படி, போலந்து நேற்று ரஷ்யாவின் வெற்றி தினத்தை நினைவு கூறும்விதமாக வார்சாவில் உள்ள சோவியத் ராணுவ நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக போலந்துக்கான ரஷ்ய தூதர் செர்கய் ஆன்ட்ரீவ் வந்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் ஆதரவாளர்கள், கைகளில் உக்ரைன் கொடியை ஏந்தியபடி ரஷ்யத் தூதரைப் பார்த்து, “பாசிஸ்ட்”, “கொலைகாரர்” என கோஷமிட்டனர். அப்போது சிலர் தூதர் மீது சிவப்பு சாயத்தை வீசினர்.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய