“போதும்ப்பா.. Off பண்ணிக்கலாமா…” – லிஃப்ட் உள்ளே அந்த மாதிரி போஸ்.. இளசுகளை ஆஃப் செய்த தமன்னா..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான ஹேப்பிடேஸ் என்ற தெலுங்கு படம் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா மேலும் தமிழ் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.,

தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பால் போன்ற தேகம் வாட்டசாட்டமான உடல் அமைப்பு என ரசிகர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

இப்படி தென்னிந்திய படங்களில் தனி சாம்ராஜ்யம் நடத்திய நடிகை தமன்னாவிற்கு ஹிந்தி படங்களில் படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு பேட்டியில் இந்திப் படங்கள் எனக்கு சரியாக அமையவில்லை என்று கூறியுள்ளார் தம்மூ.

இந்தியில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வரும் இவர் பாலிவுட்டில் எப்படியாவது அழகான ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற ஆசையில் சரமாரியான கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பாலிவுட் படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

ஆனால் தமன்னாவிற்கு நடிப்பு சரியாக வரவில்லை பாலிவுட்டுக்கு அவர் செட்டாக மாட்டார் என்று பச்சை குத்தி வைத்து உள்ளனர் ஹிந்தி இயக்குனர்கள் பலர்.

அதற்கு ஏற்றார் போல நடிகர் அஜய் தேவ்கான் உடன் இவர் நடித்த ஹிம்மத்வாலா மற்றும் அக்ஷய் குமாருடன் நடித்த என்டர்டைன்மென்ட் ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன.

இதனால் ஹிந்தி படங்களில் நடிக்கும் ஆசையை தூக்கி வைத்துவிட்டு தமிழ் தெலுங்கு போதும் என்று ஓடி வந்து விட்டார் அம்மணி. தற்போது கடைசி நல்வாய்ப்பாக இந்தி படத்தில் பிரபல இயக்குனர் மதூர் பண்டார்கர் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இவருடைய படங்கள் பல விருதுகளை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வேளை வெற்றி பெற்றால் இந்தியிலும் தமன்னாவின் மார்க்கெட் ஓபன் ஆகும் என்று கூறுகிறார்கள் தொடர்ந்து இணையத்தில் சூட்டை கிளப்பும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது லிஸ்டில் நின்றபடி கத்தி போன்ற பார்வையை வீசி ரசிகர்களை இம்சித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் அள்ளி வருகின்றது.


இந்த செய்தியை ஷியார் செய்ய