சுயஇன்பம் குறித்து ஓவியாவின் சர்ச்சை பேச்சு – விளாசும் நெட்டிசன்கள்..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

நடிகை ஓவியா என்றாலே சர்ச்சைதான். தமிழில் களவாணி, மதயானைக்கூட்டம், போன்ற படங்களில் நடித்து இவர் பிரபலமானதை விடவும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அடுத்த தமிழக முதல்வரை நீங்கள் தான் என்று கூறும் அளவுக்கு படு பிரபலம் ஆனார்.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தில் கூறும் வசனத்தை போல கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது அப்படி கிடைச்சா அது நிலைக்காது என்ற வசனத்திற்கு ஏற்ப கஷ்டப்படாமல் இவருக்கு கிடைத்த அந்த பிரபலத்தை ஒரே படத்தில் சுக்குநூறாக நொறுக்கி விட்டார் நடிகை ஓவியா.

பிக்பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை 90ML என்ற ஒரு படத்தில் நடித்ததன் மூலம் வீணாக்கி விட்டார் நடிகை ஓவியா. அந்த படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன இதைத்தொடர்ந்து ஓவியா மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ஓவியா பெண்கள் மீதான குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆண் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து நெட்டிசன் ஒருவர் நடிகை ஓவியா சில மாதங்களுக்கு முன்னர் கூறிய ஒரு கருத்தை எடுத்து தற்போது ஓவியாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணைய வாசி ஒருவர் நடிகை ஓவியாவிடம் சுய இன்பம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது சுய இன்பம் தவறல்ல என்று பதிலளித்திருந்தார்.

அதாவது ஒரு பெண்ணை கெடுப்பதற்கு பதிலாக சுய இன்பம் எவ்வளவோ மேல் என்ற தொனியில் ஓவியா பேசியிருந்தா.ர் இதனை வைத்து நெட்டிசன் ஒருவர் அன்று சுய இன்பம் சரி என்று பேசுகிறீர்கள் இன்று என்னவென்றால் ஆண் குழந்தைகளை சொல்லி வளர்க்க வேண்டும் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கருதி பேசுகிறீர்கள்.

90ML படத்தில் மிகவும் மோசமான, தரம் தாழ்ந்த பல வசனங்களை பேசினீர்கள், பல காட்சிகளில் நடித்து இருந்தீர்கள். ஆனால், இப்பொழுது ஏதோ புனிதர் போல கலாசாரம் பற்றி பேசுகிறீர்களே என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.


இந்த செய்தியை ஷியார் செய்ய