நடத்தையில் சந்தேகம்- மனைவியை வெட்டிக் கொன்ற கணவருக்கு ஆயுள்

இந்த செய்தியை ஷியார் செய்ய

 

நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது சென்னை மகளிர் நீதிமன்றம்.

சென்னையில் எம். கே. பி நகரைச் சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரமணியை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்திருக்கிறார். திருமணத்தின்போது 17 பவுன் தங்க நகைகள் மற்றும் சீர்வரிசைகள் வழங்கி இருக்கிறார்கள். ஆனாலும் திருமணத்திற்கு பின்னர் கூடுதல் பணம் கேட்டு , வீடு கேட்டு ரமணியை சித்திரவதை செய்து வந்திருக்கிறார் ராஜ்குமார். அது மட்டுமல்லாமல் ரமணியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்திருக்கிறார்.

இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார் ரமணி. அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டில் ஜூலை 21ஆம் தேதி அன்று மாமியார் வீட்டிற்கு சென்ற ராஜ்குமார், ரமணியை சமாதானம் பேசி எம்கேபி நகர் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் . வீட்டிற்கு வந்ததும் மீண்டும் ரமணியிடம் தகராறு வளர்த்து அதில் ஆத்திரப்பட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி இருக்கிறார்.

ரமணியின் தந்தையும் சகோதரரும் எம்கே பி நகரில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு விசாரணை சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

குற்றம் சாட்டப்பட்ட சார்லஸுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு ஆயுள் தண்டனையும் 20000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த அபராத தொகையில் ரமணியின் தாய் தந்தைக்கு ஏழாயிரத்தி ஐநூறு ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு நிதியிலிருந்து நிவாரணம் பெற்று கொடுக்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளார் நீதிபதி.

 


இந்த செய்தியை ஷியார் செய்ய