13 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த அந்த 13 வயது சிறுமியை திடீரென காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த உமாபதி என்கிற 20 வயது வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலமாக காணாமல் போன சிறுமியிடம் நட்பாக பேசி அவரை ஆசை வார்த்தை சொல்லி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது .
இதை அடுத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இளைஞர் உமாபதி மீது கோக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.