சந்திரிக்கா கூறியது போல நாட்டின் முழு இடங்களிலும் ரணுவம்- நாடே ராணுவ மயமாக்கப்பட்டுள்ளது !

இந்த செய்தியை ஷியார் செய்ய

இலங்கையில் ராணுவ ஆட்சியை கோட்டபாய கொண்டு வர உள்ளார் என்று, சந்திரிக்கா ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இன் நிலையில் கடந்த 3 நாட்களுக்கும் அதிகமாக நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கை அறிவித்த கோட்டபாய , ராணுவத்தை களம் இறக்கி உள்ளார். ராணுவத்தில் உள்ள பல அதிகாரிகள், இன்றுவரை கோட்டபாயவுக்கு விசுவாசியாகவே உள்ளார்கள். இதனால் எந்த ஒரு நிலையிலும் கோட்டபாய அச்சப்பட மாட்டார். காரணம் அவருக்கு இலங்கை ராணுவம் என்றும் துணை நிற்க்கும். ராணுவத்தை பாவித்தே அவர் ஆட்சியில் நீடிக்கவும் முடியும். ஆனால் மக்கள் மத்தில் ராஜபக்ஷர்களுக்கு இருந்த அத்தனை செல்வாக்கும் அழிந்து விட்டது. அடுத்த தேர்தலில், பொது ஜன பெரமுன கட்சி மட்டும் அல்ல… எந்த ஒரு ராஜபக்ஷர்களும், ஒரு MP சீட்டைக் கூட கைப்பற்ற முடியாது. இது இவ்வாறு இருக்க..

ராணுவத்தை வீதிக்கு இறக்கி ஆட்சி செய்யும் கோட்டபாயவுக்கு, பல உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இப்படியே சென்றால் எந்த ஒரு உலக நாடும் இலங்கைக்கு உதவிகளை வழங்காது. மேலும் சொல்லப் போனால் இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை பெரும் அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் இலங்கை மேலும் பன் மடங்கு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இந்த செய்தியை ஷியார் செய்ய