வந்துட்டேன்னு சொல்லு! போரில் மீண்டும் ஓங்கும் உக்ரைனின் கை! போரின் போக்கு மாறுகிறதா? பரபர பின்னணி..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

கீவ் : உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய நகரங்கள் இரண்டாவது நகரான கார்கிவ் நகரம் மீண்டும் உக்ரைனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், ரஷ்யப் படைகளின் முன்னேற்றம் பெருமளவு தடுக்கப்படும் எனவும் இது போரின் போக்கையே மாற்றும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நேட்டோ விவகாரம், உள்நாட்டு பிரிவினைவாதிகளுக்கு சுதந்திரம் என பல்வேறு காரணங்களை கூறி உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவத்தினர் போர் தொடுத்து கிட்டத்தட்ட 75 நாட்கள் கடந்துள்ள நிலையில், பல உக்ரைன் நகரங்கள் உருத்தொரியாமல் சிதைக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் போரில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் 3,381 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், 3,680 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற தகவலை உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

 

போரில் உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தை ஏற்கனவே கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ள நிலையில், அங்குள்ள முக்கியத்துவம் வாய்ந்த உருக்கு ஆலையை கைப்பற்றுவதற்கு தீவிரமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. அதேபோல உக்ரைனின் கார்கிவ் நகரத்தின் பல முக்கிய பகுதிகளை ரஷ்யாவின் ராணுவத்தினர் கைப்பற்றி இருந்த நிலையில், போரின் தொடக்கத்திலேயே உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருவது அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா ராணுவம் நடத்தி வரும் போரில் உக்ரைன் பல இடங்களில் முன்னேறி வருவதோடு, ஏற்கனவே இழந்த பகுதிகளை மீண்டும் மீட்டெடுத்து வருகிறது. இது அந்நாட்டு ராணுவத்தினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

அந்த வகையில் போரின் தொடக்கத்திலேயே ரஷ்யா ராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள பல கிராமங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் டெட்டியானா அபட்செங்கோ தெரிவித்துள்ளார்.

மேலும் பல இடங்களில் உக்ரைன் படைகள் முன்னேறி வருவதாகவும் டெட்டியானா அபட்செங்கோ கூறியுள்ள நிலையில், “கார்கிவ் உக்ரைனின் 2வது பெரிய நகரம் என்பதால், அதன் பகுதி உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பது, ரஷ்ய படைகள் முன்னேற்றத்தை தடுக்கும் என்றும், போரின் போக்கையே மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.” என போர் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். போரில் பல நாடுகளின் உதவிகள் காரணமாகவே இது சாத்தியம் என்றாலும், உக்ரைன் தீரமிக்க செயல்படுகள் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது.


இந்த செய்தியை ஷியார் செய்ய