நடிகை அனுஷ்கா கிட்டத்தட்ட மூன்று ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். தமிழில் “ரெண்டு” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை அனுஷ்கா அந்த படத்தில் இடம்பெற்ற மொபைலா மொபைலா என்ற பாடலில் அதிரிபுதிரி கிளாமர் காட்டி நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்கா இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார்
கடைசியாக அவருடைய நடிப்பில் நிசப்தம் என்ற படம் வெளியாகியது. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் அனுஷ்கா.
இந்தப் படத்தில் நடிகை அனுஷ்கா 40 வயது பெண்ணாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் பான் இண்டியா திரைப்படமாக வெளியாக உள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க நடிகர் பிரபாஸ் உடன் அனுஷ்கா காதல் இருப்பதாக செய்திகள் இன்னமும் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றன இதுகுறித்து பிரபாஸ் அனுஷ்கா இருவரும் பல இடங்களில் தங்களுடைய மறுப்பைப் பதிவு செய்து விட்ட நிலையிலும் தொடர்ந்து இது போன்ற செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
தன்னுடைய ஆரம்பகாலத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை அனுஷ்கா அதே நேரம் கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என்று கவர்ச்சியிலும் இறங்கி அடித்தார்.
இயக்குனர்களின் எதிர்பார்ப்புக்கு ஒருபடி மேலாக கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து அதன் அடிப்படையில் இவருடைய மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
அந்த வகையில் தெலுங்கு படம் ஒன்றில் கொசுவலை போன்ற கவர்ச்சி உடையில் அவர் தோன்றிய சில காட்சிகளில் புகைப்பட வடிவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என ரசிகர்கள் அரபி குதிரை அனுஷ்கா என்று வர்ணித்து வருகின்றனர்.