ரணிலை கோட்டபாய இலங்கையின், பிரதமர் ஆக்கியுள்ள நிலையில், ரணில் வீட்டுக்குப் போ என்ற பெரும் போராட்டம் அலரி மாளிகைக்கு முன்னால் ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே மக்களால் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட ரணிலை எப்படி, கோட்டபாய பிரதமர் ஆக்கினார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தான் பதவி விலகுவது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் கோட்டபாய முன் வைக்கவில்லை. ஆனால் புதிய அசரை உருவாக்க உதவுவேன் என்று மட்டும் கூறினார். சஜித் அல்லது JVP தலைவர் இல்லையேல் மைத்திரியை போட்டால் கூட பரவாயில்லை. ஆனால் ரணிலை பிரதமர் ஆக்கியுள்ள விடையம் மிகவும் கேலிக் கூத்தாக பார்கப்படுகிறது. இதனை அடுத்து மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.