மகிந்த ராஜபக்ஷ, நமால் , ஜோன்ஸ்டன் உட்பட 17 பேருக்கு உச்ச நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. போராட்டக் காரர்கள் தொடுத்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த 17 பேரும் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என தற்காலிகத் தடை விதித்துள்ளது. இதனால் ராஜபக்ஷர்கள் குடும்பத்தினர் மீது பெரிய இடி இறங்கியுள்ளது. இது போக மகிந்தவுக்கு எதிராக பல வழக்குகளை பதிவு செய்ய, சட்டத்தரணிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. தற்போது உள்ள நிலையில், இலங்கை உச்ச நீதிமன்றில், மகிந்தவுக்கு எதிராக போர் குற்ற வழக்கை கூட தொடுக்க முடியும் போல இருக்கே ? பாருங்கள் காலம் எப்படி எல்லாம் மாறுகிறது என்று. இலங்கையின் அரசனாக தன்னை அறிவித்து. சிங்கள மக்கள் தன்னை தலைமேல் வைத்து …
கொண்டாடுவார்கள் என நினைத்து, காலத்தை கழித்து வந்தார் மகிந்த. ஆனால் 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தாக்கம் மகிந்தவை மட்டும் அல்ல, முழு ராஜபக்ஷர்களையும் அழித்து விட்டது. சகல உலக நாடுகளுக்கும் பெரும் இழப்பை கொடுத்த கொரோனா வைரஸ், தமிழர்களுக்கு மட்டும் நல்லதே செய்துள்ளது. இதனால் சில தமிழர்கள் கூறுகிறார்கள், கொரோனாவுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று( விளையாட்டாக) ஆனால் அதிலும் அர்த்தம் உள்ளது.