நடிகை சுபிக்ஷா தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் துணையாக நடித்து வருகிறார்.
தமிழில், நீதானே என் பொன்வசந்தம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பாலோவர்களை கொண்டு ஒரு சோசியல் மீடியா இன்ஃபுலன்சராகாவும் திகழ்ந்து வருகிறார்.
பல சிறு நிறுவனங்களின் பொருட்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரமும் செய்து வருகிறார். இவருடைய முதன்மைத் தொழில் பரதநாட்டியம் ஆகும்.
தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருவதுடன் சினிமா வாய்ப்புகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
இந்நிலையில், கோடை வெயிலை சமாளிக்க நீச்சல் குளத்தில் துள்ளி விளையாடும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை வாரி வருகிறார் அம்மணி.