அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுரத்தைச் சேர்ந்தவர் . 35 வயதான இந்த வாலிபர் அரசு பேருந்து ஓட்டுணராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலையில் விளாத்திகுளத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பேருந்தை இயக்கிச் சென்றிருக்கிறார்.
அப்போது திருச்செந்தூர் அருகே பேருந்து வந்த போது, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஏறியிருக்கிறார். பேருந்தில் மாணவி ஏறியது முதல் ஓட்டுநர் சுரேஷ் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.
இதில் பதற்றமடைந்த மாணவி, வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் இது குறித்து சொல்ல, பெற்றோர்கள் உடனடியாக திருச்செந்தூர் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அரசு பேருந்து ஓட்டுநர் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.