ஆடைகளை அவிழ்த்து போட்டுவிட்டதால் அங்கிருந்து ஓட முடியாத நிலை! மருத்துவமனையின் கழிவறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடுமை

இந்த செய்தியை ஷியார் செய்ய

திடீரென்று உள்ளே நுழைந்த அந்த நபர் முதலில் ஆடைகளை வலுக்கட்டாயமாக இழுத்து அவிழ்த்து போட்டு விடுகிறார். அதன் பிறகு அங்கிருந்து அப்பெண் ஓட முடியாது என்பதால் முதலில் இந்த காரியத்தை செய்து விட்டு அடுத்து அந்த கர்ப்பிணி பெண்ணின் வாயைப்பொத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மருத்துவமனையின் கழிவறையில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு இந்த கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

உத்திர பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் மாவட்டம். இங்குள்ள மருத்துவமனைக்கு கடந்த ஏழாம் தேதி அன்று மூன்று மாத கர்ப்பிணி பெண் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்றிருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். இதை அடுத்து மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இரவு 9 மணிக்கு அவர் மருத்துவமனையில் இருந்த கழிவறைக்கு சென்று இருக்கிறார். கழிவறைக்குள் அவர் நுழைந்த வேகத்தில் மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் பின்னாலேயே வந்து பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து ஆடைகளை அவிழ்த்து வீசி இருக்கிறார். ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டதற்கு, ஆடைகள் இல்லாமல் நீ வெளியே ஓட முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

அப்போது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய நினைப்பது தெரிய வந்திருக்கிறது. அவர் சத்தம் போட முயற்சிக்கவும் அவர் வாயை பொத்திக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இருந்தாலும் முடிந்த மட்டும் அந்த நபரின் கைகளை அகற்றி விட்டு சத்தம் போட்டு இருக்கிறார் அந்த கர்ப்பிணி பெண்.

அந்த சத்தம் கேட்டு ஆட்கள் ஓடி வந்து இருக்கிறார்கள். ஆட்கள் ஓடி வருவதை கண்டதும் அந்த ஊழியர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் மேற்கொண்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.

மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தை தனது வீட்டிற்கு சென்றதும் கணவரிடம் சொல்லி இருக்கிறார். அவர் நேரடியாக போலீசுக்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மருத்துவமனை சென்று விசாரணை நடத்தியதில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

விரைவில் இந்த வழக்கில் குற்றவாளியை பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய