கொழும்பில் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள இந்திய தூதுவரலாயத்தில், விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது என தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதுவராலயத்தில் 90 சத விகிதமானவர்கள் இலங்கையர்களே வேலை செய்கிறார்கள் என்றும். கடந்த சில தினங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில். அவர்களால் வேலைக்கு வர முடியவில்லை என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதனால் தம்மால் விசா வழங்க முடியவில்லை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். இதனால் வியாபார நோக்கில், மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்லவிருந்த பலருக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. பிள்ளைகள் பள்ளிக் கூடம் செல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள். இது தான் இன்றைய இலங்கையின் நிலை.