வெட்ட வந்த கணவனை திருப்பி வெட்டிக்கொன்ற மனைவி; வேலூரில் பரபரப்பு

இந்த செய்தியை ஷியார் செய்ய

வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் குமரவேல் (60). இவர் லாரி மெக்கானிக் கடையில் பணியாற்றுகிறார். இவரது மனைவி கோமதி (48). இவர் கூட்டுறவு வீடு கட்டும் கடன் சங்கத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மகள் பிரியா (20) இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

வெயில் காலத்தில் ஏன் இப்படி? ஏசி விலையை உயர்த்தும் நிறுவனங்கள்!
இந்த நிலையில், குமரவேல் தினசரி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளார். இந்த சூழலில் நேற்று நள்ளிரவில் சுமார் 1.30 மணி அளவில் குமரவேல் மனைவி கோமதியை கத்தியால் கை கால்களில் வெட்டியுள்ளார்.

இதில் அலறித்துடித்த கோமதி குமரவேலிடமிருந்து கத்தியை பிடுங்கி குமரவேலை கழுத்தின் பின்பக்கமாக வெட்டியுள்ளார். இதில் குமரவேல் ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயமடைந்த கோமதி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதுகுறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்காக அவரது மகள் பிரியா மற்றும் வீட்டின் உரிமையாளரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய