ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் டர்டி பிக்சர் என்று தலைப்பிடப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்ததன் மூலம் தான் இந்தியா நடிகையாக உருவெடுத்தார்.
தொடர்ந்து கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வந்த வித்யாபாலன் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடித்து போரடித்து விட்டது எனவும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க விரும்புவதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் வித்யாபாலன் கூறியிருந்தார்.
அவர் கூறியதாவது சினிமா துறையில் ஆணாதிக்கம் என்பது அளவுக்கு அதிகமாக உள்ளது என நினைக்கின்றேன் வலுவான கதாபாத்திரத்தில் ஆண்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று நிறைய ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் அதை நான் நம்புவது கிடையாது கதை தேர்வில் நான் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறேன் வித்தியாசமான கதையில் நடித்தால் அந்த படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ நான் முழுமையாக நடித்தேன் என்ற திருப்தி எனக்கு கிடைக்கின்றது.
சாதாரண குடும்பப் பெண்கள் தொடங்கி அசாதாரணமான ஆக்சன் பெண்கள் வரை நடிகைகள் நடிக்கவில்லை என்றால் சினிமா கிடையாது கமர்சியல் கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
ஆனால் அதே சமயம் அப்படி நடிக்கும்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என்று வித்யாபாலன் கூறியுள்ளார் இது ஒரு பக்கம் இருக்க அடிக்கடி இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது நீல நிற உடையில் கிளுகிளு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குளுகுளுவென ஆக்கியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.