என்னதான் பான்இண்டியா நடிகைகள் என்று சொல்லிக்கொண்டாலும் வெகு சில நடிகர் நடிகைகள் மட்டுமே இந்தியா முழுவதும் பிரபலமாக இருப்பார்கள். அந்த பட்டியலில் நடிகை தீபிகா படுகோனேவும் ஒருவர்.
தமிழில் இதுவரை நேரடியாக எந்த படத்திலும் நடித்ததில்லை என்றாலும் பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தீபிகா படுகோனே பிரபலமாக உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியான கோச்சடையான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தது இவர்தான்.
ஆனால் படத்தை.. ஏதோ மோசன் கிராபிக்ஸ் செய்கிறேன்… டியூசன் கிராபிக்ஸ் செய்கிறேன் என்று சோட்டா பீம் அளவுக்கு கூட செல்லாத ஒரு படத்தை எடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டவர் படத்தின் இயக்குனரும் ரஜினியின் மகளுமான சவுந்தர்யா.
கன்னட மொழிகளில் வெளியான ஐஸ்வர்யா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை தீபிகா படுகோனே. பின்னர் பாலிவுட்டில் வெளியான ஓம் சாந்தி என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
அதன்பிறகு இவர் நடித்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இவரை முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்துக்கு அழைத்துச் சென்றது. பாலிவுட் மட்டுமல்லாமல் இந்திய அளவில் சர்வதேச அளவில் பிரபலமானவர் தீபிகா படுகோனே.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் முன்னணி நாயகர்களில் ஒருவர் இருக்கும் ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார் அம்மணி.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தீபிகா படுகோனே தற்போது பிரபல நிறுவனமொன்றின் உடையை பிரமோட் செய்யும் வகையில் உடலோடு ஒட்டிய தோல் நிற உடையணிந்து கொண்டு யோகா செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே போட்டு இருக்கீங்களா..? என்று ஷாக்காகி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.