ரிஷியை வெளியேற்றி மீண்டும் பொறிஸ் ஜோன்சனை கொண்டுவரச் சதித் திட்டம் ஒன்று நடக்கிறது

இந்த செய்தியை ஷியார் செய்ய

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுண்ணக்கை பதவியிலிருந்து கவிழ்த்து, மீண்டும் பொறிஸ் ஜோன்சனை பிரதமர் ஆக்கும் சதி ஒன்று நடப்பதாக லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சியில், இந்த சதி நடவடிக்கையை சில MPக்கள் மேற்கொண்டு வருவதாக அது மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே முன்னர் பிரதமராக இருந்த, தெரேசா மேக்கும் இப்படித் தான் நடந்தது. அதுபோல பின்னர் பொறிஸ் ஜோன்சன் அதற்குப் பின்னர் வெறும் 1 மாதமே பிரதமராக இருந்த லிஸ் ரஸ், இப்படிப் பல சதி நடவடிக்கையால் பலர், பிரதமர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டார்கள். அது மீண்டும் அரங்கேற உள்ளதாக அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

பணவீக்கம் மற்றும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ள பிரிட்டன், நிலைகுலைந்து நிற்கிறது. இந்த நேரத்தில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்தை நாடு தாங்காது என்று அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


இந்த செய்தியை ஷியார் செய்ய