மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா ஹரிக்கு அழைப்பு இல்லை- ஆனால் அகதிகள் பார்வையாளராக அழைப்பு

இந்த செய்தியை ஷியார் செய்ய

பிரிட்டன் மகாராணி இறந்த பின்னர், அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றார். இருப்பினும் முடிசூடும் நிகழ்வு இன்னும் முறைப்படி நடக்கவில்லை. இது பெரும் கோலாகல விழாவாகப் பிரிட்டனில் நடைபெறவுள்ளது. சுமார் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. இன் நிகழ்வில் பிரிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விடையங்கள் உள்ளடங்கும் என்று பக்கிங்ஹம் மாளிகை அறிவித்துள்ளது. மேலும் சொல்லப் போனால் இம்முறை அகதிகளைப் பார்வையாளராகக் கொண்டுவர உள்ளார்கள்.

விசா இல்லாமல் தமது பிரிட்டன் வதிவுரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கும் பல அகதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஆனால் சொந்த மகனான இளவரசர் ஹரிக்கு எந்த ஒரு அழைப்பும் விடுக்கப்படவில்லை. அதுபோலவே ஹரியின் மனைவி மெகானுக்கும் இதுவரை அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை. மே மாதம் 6, 7, மற்றும் 8ம் திகதி என 3 தினங்களுக்கு பெரும் கோலாகல விழாவாக இந்த முடிசூட்டு விழா கொண்டாடப்படவுள்ளது.

இன் நிகழ்வுகளை நேரடியாகக் கண்டு கழிக்கவென பல லட்சம் மக்கள் வேறு நாடுகளிலிருந்து பிரிட்டன் வரவுள்ளார்கள். வாழ்நாளில் இதுபோன்ற நிகழ்வை ஒரு தடவையே பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.


இந்த செய்தியை ஷியார் செய்ய