பிரிட்டனை கடும் குளிர் தாக்கியுள்ள அதேவேளை, பெரும்பாலான வீதிகள் உறைந்து கண்ணாடிப் பளிங்குபோல ஆகிவிட்டது. அடிக்கடி உப்பைத் தூவிவருகிறது லோக்கல் கவுன்சில்கள். இருந்தாலும் மீண்டும் மீண்டும் நிலவி வரும் கடும் குளிரால், வீதிகளில் பனிக்கட்டி உறைவதைத் தடுக்க முடியவில்லை. இன் நிலையில் M40 நெடுஞ்சாலையில் சற்று முன்னர் நடந்த பெரும் விபத்தில் சுமார் 12 கார்கள் சிக்கியுள்ளது.
இதில் 2 காரில் பயணித்த 2 ஓட்டுனர்களும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக மெற்றோ பொலிடன் பொலிசார் அறிவித்துள்ளார்கள். இதற்கு கடும் உறைபனி தான் காரணம் என்று அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள். இதனால் தேவை இல்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அத்தோடு காரின் டயர்களை..
நீங்கள் பரிசோதனை செய்வது நல்லது. குளிர்காலத்தில் பாவிக்கக் கூடிய டயர்களை மாற்றுவதும் நல்லது தமிழர்களே.