அஜித்தை கோபமாக்கிய விக்னேஷ் சிவன் நயன் தாராவுக்காக வாய்ப்பு கொடுத்தார்களா ?

இந்த செய்தியை ஷியார் செய்ய

கடந்த வருடம் மே மாதம் நடிகர் அஜித்தை வைத்து லைக்கா நிறுவனம் படம் தயாரிப்பதாக முடிவாகியது. அன்று முதல் பல தடவைகள் விக்னேஷ் சிவன், லைக்கா உரிமையாளர் சுபாஷ்கரனை சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டதை அடுத்து. இந்த அருமையான வாய்ப்பை விக்னேஷிடம் கொடுக்க லைக்கா. அதனை அவர் சரியாகப் பயன்படுத்தவே இல்லை. மிகவும் கேவலமான கதை ஒன்றை, அஜித்துக்குச் சொல்ல…

அதனை அஜித் உடனே நிராகரித்து விட்டார். உடனே நான் தயாரிப்பாளரிடமே கதையைச் சொல்கிறேன் என்று லண்டன் புறப்பட்டார் விக்னேஷ் சிவன். அவர் கெட்ட நேரம், விக்னேஷ் சிவன் லண்டன் வந்தவேளை. அங்கே ஏற்கனவே அஜித் லண்டனில் வேறு வேலையாக இருந்தார். உடனே அஜித்தை அழைத்த லைக்கா நிறுவனம் பிரச்சனையை அலசி ஆராய்ந்து, கதை நன்றாக இல்லை என்பதனைக் கண்டறிந்து விட்டார்கள். 200 கோடி செலவில் எடுக்க உள்ள படத்தின் கதை எப்படி இருக்கவேண்டும் ..

ஆனால் அதற்கான ஒரு கடின உழைப்பையும் விக்னேஷ் சிவன் போடவில்லை. இதனை அடுத்தே மகிழ் திருமேனியை அஜித்தின் அடுத்த படத்திற்கான இயக்குநராக லைக்கா நிறுவனம் போட்டுள்ளது. நயன் தாராவுக்காகவும் அவர் மேல் உள்ள மரியாதை காரணமாகவுமே லைக்கா நிறுவனம் இந்த படத்தை முதலில், விக்னேஷ் சிவனிடம் கொடுத்தார்கள். ஆனால் அவர் தான் இதனைச் சரியாகப் பயன்படுத்தவில்லை.


இந்த செய்தியை ஷியார் செய்ய