புருஷன் வெளிநாட்டில்.. அடிக்கடி வீட்டிலேயே மனைவி உல்லாசம்.. ஆசை தீர்க்க வந்த வாலிபரால் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி

இந்த செய்தியை ஷியார் செய்ய

கர்நாடக மாநிலம் கலபுரகி டவுன் ரோஜா பகுதியில் வசித்து வந்தவர் 36 வயதான சஹானா பேகம் தன்னுடைய கணவருடன் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் வேலை விஷயமாக சவுதி அரேபியாவிற்கு சென்றுவிட்டார். இதனால், மனைவி மட்டும் வீட்டில் தனியாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வாசிம் அக்ரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வெளிநாட்டிற்கு சென்றதால் இவர்கள் இருவருக்கும் வசதியாக போனது. இளைஞரை அந்த பெண் வீட்டிற்கே வரவழைத்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், செலவுக்கு அடிக்கடி பணம் வாங்கி சென்றதாகவும் கூப்படுகிறது. இந்த விவகாரம் நாளடைவில் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில், கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்து விட்டு செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் சஹானாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சஹானா பேகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படிடையில் அக்ரமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய