Posted in

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தைக் காலி செய்ய திமுக போட்ட மாஸ்டர் பிளானா?

சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஒரே ஒரு பெயர் தான் டிரெண்டிங் – அது ‘மங்காத்தா’. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான இந்த மாபெரும் பிளாக்பஸ்டர் படம் மீண்டும் வெளியாகப்போகிறது என்ற அறிவிப்பு, இணையத்தையே தீப்பிடிக்க வைத்துள்ளது. ஆனால், இந்த ரீ-ரிலீஸிற்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் ‘ஸ்கெட்ச்’ இருப்பதாக கிளம்பியுள்ள சர்ச்சை தான் இப்போது உச்சகட்ட பரபரப்பு!

ஜனநாயகனுக்கு செக் வைக்கிறதா திமுக?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதே நேரத்தில் ‘மங்காத்தா’ படத்தை ரீ-ரிலீஸ் செய்வது திட்டமிட்ட சதி என விஜய் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். “ஜனநாயகன் படத்தின் வசூலைத் தடுக்கவே ஆளும் திமுக அரசு, அஜித்தின் மங்காத்தா படத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” என்பது இவர்களது பகிரங்கக் குற்றச்சாட்டு.

அஜித் ரசிகர்கள் கொடுத்த ‘தக்காளிச் சட்னி’ பதிலடி!

விஜய் ரசிகர்களின் இந்தப் புகாருக்கு, அஜித் ரசிகர்கள் கொடுத்த பதிலடி தான் இப்போது வைரல் ‘பஞ்ச்’. கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெளியாகி, ரஜினி, கமல், சூர்யா என மொத்த திரையுலகின் வசூல் சாதனைகளையும் முறியடித்து ‘கிங்’ ஆக நின்றது.

படம் வெளியான ஒரே வாரத்தில் (ஏப்ரல் 18), விஜய்யின் ‘சச்சின்’ படத்தை எதற்காக ரீ-ரிலீஸ் செய்தீர்கள்? என்று அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“அப்போ பண்ணது நியாயம்னா, இப்போ பண்றது மட்டும் சதியா? உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா?” என்ற இவர்களது ‘நச்’ பதிலடி விஜய் ரசிகர்களை வாயடைக்கச் செய்துள்ளது.

வசூல் வேட்டையில் ‘தல’ தான் கெத்து!

இந்த ஆண்டில் வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்களை விட, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ தான் இமாலய வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், வரும் ஜனவரி 23-ம் தேதி மீண்டும் களமிறங்குகிறது ‘மங்காத்தா’.

இந்த ‘கிங் மேக்கர்’ ஆட்டம் தொடங்கினால் வசூல் சாதனைகள் மீண்டும் மாற்றி எழுதப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. திரையரங்குகளில் ஜனவரி 23-ல் மீண்டும் ‘தலை’ தரிசனத்தைக் காண ரசிகர்கள் வெறித்தனமாகக் காத்திருக்கிறார்கள்!