பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுச் செல்லும் பாகிஸ்தான் விமானங்களுக்கு, இந்திய வான்வெளியை பயன்படுத்த, விரைவான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வான்வெளியை பயன்படுத்த நேற்று திங்கட்கிழமை அனுமதி கோரும் விண்ணப்பம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இலங்கைக்கு மனிதாபிமான உதவி வழங்குவதே கோரிக்கையின் நோக்கம் என்பதால், இந்தியா இந்த கோரிக்கையை விரைவாக செயல்படுத்தியதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி, நான்கு மணி நேரத்திற்கும் குறைவான காலத்திற்குள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உதவி விமானங்களுக்கு இந்தியா தமது வான்வெளியை பயன்படுத்த மறுத்துவிட்டதாக சில பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை முற்றிலும் மறுத்துள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.