ஏற்கனவே பல வருடங்களாக, காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்திக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ஆனால் மகள் பிரியங்கா காந்தி எப்பொழுதும் அம்மாவின் பக்கம் தான். காங்கிரஸ் கட்சியை மாற்றி அமைக்க வேண்டும், புதுக் கொள்கைகளை கொண்டு வர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவர் ராகுல் காந்தி. ஆனால் மிகப் பழைய முறைப்படி கட்சியை நடத்திச் செல்கிறார் சோனியா.
இதனால் தான் பல தடவை இவர்களுக்கு இடையே பெரும் கருத்து வேறுபாடுகள் வெடித்தன. தற்போதும் மிகப் பெரிய இழுபறி நிலை ஒன்று ஆரம்பித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே, ‘ராகுல் காந்தி அணி’ (Rahul Gandhi Team) என்று ஒன்று இயங்குகிறது. அதில் பெரும்பாலும் பல இளைஞர்கள், படித்தவர்கள் ராகுல் காந்திக்காக வேலை செய்கிறார்கள். இதேவேளை, காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்கள் சோனியா பக்கம் இருக்கிறார்கள்.
‘தமிழக வெற்றிக் கழகம்‘ (TVK) கட்சியைத் தொடங்கி மக்கள் ஆதரவு பெற்று, நாளுக்கு நாள் வளர்ந்து விஜய் அவர்கள் ஒரு உச்சத்தை தொட்டுள்ளார். இதனை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கேரளாவில் மம்முட்டி, மோகன் லாலை விட பெரிய நடிகராக உள்ளார். சொல்லப் போனால் தமிழ் நாட்டை விட விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். மேலும் தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்தியாவில் மொத்தம் 4 மாநிலங்களில் விஜய் செல்வாக்கு பரவி உள்ளது. அவரோடு காங்கிரஸ் இணைந்தால்…
இந்த 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஓரளவு பெரும் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளது என்பது ராகுல் காந்தியின் கணக்கு. ஆனால் அவரது அம்மாவோ தி.மு.க.வுடன் தான் இருக்கவேண்டும் என்றும், தாம் பல வருடங்களாக தி.மு.க.வோடு தான் இருக்கிறோம் என்றும் கூறி வருகிறார். இதனால் காங்கிரஸ் தலைமையே இரண்டாக உடைந்துள்ளது. ஒரு பக்கம், ‘ராகுல் சொல்வதே சரி’ என்கிற கூட்டம். மறு முனையில் ‘சோனியா சொல்வதே நிஜம்’ என்று சொல்லும் கூட்டம்.
இதன் ஒரு அங்கம் தான், ராகுலுக்கு மிகவும் நெருக்கமான நவீன் சக்கரவர்த்தி, சென்னை வந்து விஜயைச் சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்திச் சென்றுள்ளார். பெரும்பாலும் ஜனவரி மாதம் காங்கிரஸ் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று கூறப்படுகிறது. ராகுல் எடுக்கப் போகும் இந்த முடிவு உண்மையில் நல்ல முடிவு தான். தமிழ் நாட்டில் மக்கள் தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் உள்ளார்கள். போதாக் குறைக்கு மழை மற்றும் வெள்ளம் வந்ததால், “₹4,300 கோடிக்கு என்ன நடந்தது?” என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
எனவே வரும் தேர்தலில் வெறும் 40 இடங்களைக் கைப்பற்றவே தி.மு.க. திக்குமுக்காடும் நிலை உள்ளபோது, எப்படி காங்கிரஸ் கூட்டணி இடங்களைப் பிடிக்கும்? அதுவே விஜய் கட்சியோடு இணைந்தால் பல இடங்களில் காங்கிரஸ் வெல்ல முடியும். என்ன நடக்கப் போகிறது? அம்மாவா? இல்லை மகனா? பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.