தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 1 கோடி பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது பீகாரை விட அதிகம் என்பது ஒரு புறம் இருக்க, சென்னையில் மட்டும் சுமார் 10 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளார்கள். இதில் இடம் மாறியவர்கள், இறந்து போன நபர்கள், மற்றும் தொடர்பு கொள்ள முடியாத நபர்கள் அடங்குகிறார்கள்.
இதனால் திமுக வுக்கு என்ன பாதிப்பு ?
இவர்கள் வாக்குகளை தான் திமுக, மற்றும் அதிமுக பல ஆண்டுகளாக பாவித்து வந்தது. உதாரணமாக வீட்டில் ஒரு பெரியவர் இறந்து விட்டால், அவரது வாக்காளர் அட்டையை சில குடும்பத்தினர் தேர்தல் வரும் நேரங்களில் எல்லாம் 5,000 ரூபாய்க்கு வாடகைக்கு கொடுப்பது வழக்கம். மற்றும் இடம் மாறிய நபர்களின் அடையாள அட்டையை வைத்து, திமுக மற்றும் அதிமுக , லோகல் ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதனை பயன்படுத்தி வாக்குகளை போடுவார்கள். இப்படி பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக மேல் பலத்த அடி விழுந்துள்ளது.
விஜய்க்கு இதனால் என்ன லாபம்
நடப்பதை எல்லாம் வைத்துப் பார்த்தால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் இவை எல்லாமே ஆதரவாக இருக்கிறது. காரணம் TVK கட்சியை பொறுத்தவரை, எல்லாமே இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகள் தான். அதிலும் பாதிப் பேர், தற்போது புதிதாக தம்மை பதிந்தவர்கள். இதனால் TVKக்கு விழும் வாக்கில் எந்த மாற்றமும் இருக்கப்போவது இல்லை. சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள் என்றதுமே திமுக கோட்டையே ஆடிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.