தமிழர் தான் தமிழருக்கு ஆப்பு வைப்பார்கள், அதுக்கு வேறு, … இனத்தவர்கள் எவரும் தேவை இல்லை என்று சில புத்திஜீவிகள் சொல்வார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று பாருங்கள். எட்டப்பன் தொடக்கம், காக்கை வன்னியன் வரை, நவீன யுகத்தில் புலிகளின்(Tamil LTTE) கருணா. இது Franceல் நடந்த உண்மைச் சம்பவம், ஆனால் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை.
பிரான்ஸ் Paris நகரில் ஒரு கணவன் மனைவி, பிரிந்து வாழ்ந்துள்ளார்கள்… அப்படியும் சொல்ல முடியாது. இதனால் தனியான தாய்(Single Mom) என்று பிரான்ஸ் அரசு அந்த மனைவிக்கு மாதம் தோறும் ஒரு single mom allowance in france கொடுப்பனவை வழங்கி வந்துள்ளது. மறு புறத்தில் கணவன் தனக்கு வீடு இல்லை என்று கூறி அரச வீட்டு ஒன்றை எடுத்துவிட்டார். அந்த வீட்டில் வேற்று நாட்டவரை வாடகைக்கு விட்டு, அதில் பணத்தை உழைக்க. இங்கே மனைவி மற்ற புறத்தில் அரசிடம் பெரும் பணத்தை கறக்க… இவர்கள் வாழ்கை என்னவோ நன்றாகத் தான் ஓடிக் கொண்டு இருந்தது.
இது இவ்வாறு இருக்கையில் வெளி உலகிற்கு தாம் பிரிந்து வாழ்வது போல காட்டிக் கொண்ட இந்த தம்பதிகள். இரவில் மட்டும் ஒன்றாக ஒரே வீட்டில் இருப்பது வழக்கம். இதனை அவர்களது உறவினர்கள் மணந்து பிடித்தார்களா ? இல்லை நண்பர்கள் சிலர் அறிந்து கொண்டார்களா ? இல்லை புதிய எதிரி அறிந்து கொண்டானா தெரியவில்லை. இவர்களில் ஒருவர் மிகவும் விளாவாரியாக அதுவும் பிரான்ஸ் மொழியில் பொலிசாருக்குfrance Police அறிவித்துள்ளார்கள்.
அது போக சில தினங்களுக்கு முன்னர், கணவன் மனைவி…. இப்ப…. (அதுவும் இந்த செக்கன்) ஒன்றாக தான் இருக்கினம் … போனால் கோழி அமுக்குவது போல அமுக்கி பிடிக்கலாம் என்று டிப்ஸ் வேறு கொடுத்துள்ளார் அந்த நபர். இதனை தெரிந்துகொண்ட பொலிசார் சடுதியாக வீட்டுக்குச் செல்ல. அங்கே பிரிந்து விட்டதாக சொல்லப்பட்ட கணவனும் மனைவியும் இருக்க பொலிசார் கைது செய்ய, … அப்பிடி.. போடு…. போடு… போடு …என்று பாட்டுப் பாடி கூத்தாடி இருப்பார் தகவல் சொன்ன நபர்.
எங்கட சனத்தை எப்பவுமே திருத்தவே முடியாது ! ஒருவர் முன்னேறுவது என்றால் 10 பேர் இருப்பார்கள் காலை வார ! அன்று மகிந்த ராஜபக்ஷ ஒரு கூட்டத்தில் கூறினார், நாங்கள் ஏர்போட்டில் கைது செய்த எல்லா தமிழர்களும், வெளிநாட்டில் உள்ள சில தமிழர்களால்…காட்டிக் கொடுக்கப்பட்டது தான் என்று. ஈமெயிலுக்கு மேல் ஈமெயில் வரும். இவர் வருகிறார் ….இந்த ஏர்லைஸ்சில் , அவர் வருகிறார் இத்தனை மணிக்கு என்று காட்டிக் கொடுத்ததே தமிழர்கள் தான்.. அப்படியான ஒரு பெரும் ஒற்றுமை மிக்க சமூகம்…. நாங்கள் பாருங்கோ… எங்க போய் தலையை முட்ட ?