இந்தச் சம்பவம் தொடர்பாக பார்பதற்கு முன்னர், 60, அல்லது 70 வயதில் வரவேண்டிய மாரடைப்பு ஏன் 30 வயது இளைஞர்கள், ஏன் 25 வயது இளைஞர்களுக்கு கூட வருகிறது ? என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? இதனை எப்படி தடுப்பது என்று நாம் ஒரு சிறிய விடையத்தை அறிந்தால் போதும். தப்பி பிழைத்து விடலாம். அதனால் இதனை வாசித்து விட்டு, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். பொதுவாக நாம் உண்ணும் உணவில், 2 வகையான கொலஸ்ட்ரால் இருக்கிறது. ஒன்று நல்லது ஒன்று மிகவும் கெட்டது. HDL என்பது மிகவும் ஆபத்தான கொலஸ்ட்ரால், LDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால்.
“ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, நண்டு, இறால், தேங்காய்ப்பால் ஆகியவற்றில் ஆபத்தான கொலஸ்ட்ரால் உள்ளது. இவற்றை நாம் உட்கொள்ளும் போது, அவை நேரடியாக ரத்த நாளங்களில் கலந்து, பின்னர் இதயத்திற்குச் செல்லும் குறுகிய பாதைகளில் சென்று தங்கிவிடுகின்றன. இவை கை அல்லது கால்களில் உள்ள நாளங்களில் தங்குவதில்லை; சரியாக இதய நாளங்களையே சென்றடைகின்றன. இது ஒரு வியப்பான விஷயம் என்றாலும் இதுவே உண்மை.
நாளடைவில் இவை ரத்த நாளங்களில் படிந்து, இறுதியில் ஒரு நாள் மாரடைப்பை (Heart Attack) ஏற்படுத்திவிடுகின்றன. நெஞ்சு வலி, இடது கையில் வலி, இடது பக்க முதுகில் வலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறிகளாகும். மேலும், குளிர்ச்சியான சூழலிலும் உடல் அதிகமாக வேர்க்கும். இத்தகைய சூழலில், மருத்துவரை அணுகும் முன்னரே ‘அஸ்பிரின்‘ (Aspirin) மாத்திரையை உட்கொள்வது நல்லது. அது ரத்தத்தை உடனடியாக நீர்த்துப்போகச் செய்வதால் (Thinning), அடைப்பு உள்ள இடத்தின் வழியாக ரத்தம் செல்ல வழிவகை செய்யும். இதன் மூலம் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஒருவரின் உயிரைத் தக்கவைக்க முடியும். அந்த நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றால் உயிரைக் காப்பாற்ற வாய்ப்பு உண்டு.”
இந்த 34 வயது இளைஞருக்கு என்ன நடந்தது ?
பெங்களூரை உலுக்கிய ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் இது. கடந்த 14ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் வெங்கடரமணன் (34) என்ற இளைஞருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரது மனைவி ரூபாவுடன் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். அங்குப் போதிய வசதி இல்லாததால், வேறொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு செய்யப்பட்ட இ.சி.ஜி.யில், வெங்கடரமணனுக்கு மாரடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மேம்பட்ட சிகிச்சைக்காக ஜெயதேவா இருதய மருத்துவமனைக்குச் செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஆம்புலன்ஸ் கிடைக்காததால், கணவன் மனைவி இருவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளிலேயே பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஜெயதேவா மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், கதிரேனஹள்ளி பாலம் அருகே வெங்கடரமணனுக்கு மீண்டும் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நிலைதடுமாறிய இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளனர். கணவர் சாலையில் விழுந்து உயிருக்குப் போராடியதைக் கண்ட ரூபா, அதிர்ச்சியில் உறைந்தார். அதிகாலை நேரம் என்பதால், அந்த வழியாகச் சென்ற வாகனங்களை வழிமறித்து, உதவிக்காகவும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ‘லிஃப்ட்’ கேட்டும் அவர் கதறியுள்ளார். ஆனால், மனிதாபிமானமற்ற முறையில் எந்த வாகன ஓட்டியும் உதவ முன்வராமல், தங்கள் வாகனத்தை நிறுத்தவில்லை. ஒவ்வொரு நொடியும் வெங்கடரமணனின் உயிரைப் பறித்துக் கொண்டிருந்த நிலையில், உதவிக்காக ரூபா போட்ட கூச்சல் காற்றில் கரைந்தது.
சிறிது நேரம் கழித்து, வெங்கடரமணனின் தங்கைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வந்து முதலுதவி செய்ய முயன்றார். அதன் பின்னரே, ஒரு கார் ஓட்டுநர் உதவ முன்வந்துள்ளார். ஆனால், அதற்குள் மிகவும் தாமதமாகிவிட்டது. வெங்கடரமணனை ஜெயதேவா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ‘யாராவது சரியான நேரத்தில் உதவி செய்திருந்தால், என் கணவர் இன்று உயிருடன் இருந்திருப்பாரே!’ என ரூபா கதறியழுதது பார்ப்போரின் நெஞ்சைக் கரைத்தது. இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வெளியாகி, மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. மனித நேயம் மரித்துப் போனதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இந்தச் சோக சம்பவம்.