கடந்த 29ம் திகதி லண்டன் புஷியில் உள்ள Vu Lounge Bushey உணவகத்தில் ஏற்பட்ட வாய் தர்கம் காரணமாக, ஈழத் தமிழரான ஜெயந்தன் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு , பின்னர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இது தொடர்பாக எமது ஊடகம் பொலிசாரை(Hertfordshire Police) அணுகி , தகவல் அறியும் சட்டம்(freedom of information act uk) ஊடாக மேலதிக தகவல்களை தருமாறு கோரி இருந்தது.
கத்தியால் குத்தியதாக கருதப்படும் நபர்( Dequarn Williams 25) என்பவர் குறித்த உணவகத்திற்கு ஒரு பெண்ணுடன் வந்துள்ளார் என்றும். வாக்குவாதம் நடந்த பின்னர், குறித்த பெண்ணே கத்தியை எடுத்து அந்த நபரிடம் கொடுத்ததாகவும் அறியப்படுகிறது. மொத்தமான பொலிசார் 2 பெண்களை கைது செய்து பிணையில் விடுதலை செய்துள்ளார்கள்.
அதில் ஒருவர் கத்தியை எடுத்து கொடுத்ததாக கூறப்படும் பெண், மற்றும் உணவகத்தில் இருந்து தப்பிச் சென்று தஞ்சமடைந்த வீட்டில் இருந்த பெண். இது இவ்வாறு இருக்க குறித்த உணவகத்தில் உள்ள CCTV காட்சிகள் அனைத்தை பொலிசார் எடுத்து ஆராய்ந்து வருகிறார்கள்.
இது இவ்வாறு இருக்க, கடந்த 5ம் திகதி (வெள்ளிக்கிழமை) செயின் அல்பேன்ஸ் நீதிமன்றில், குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகி இருந்தார். அவரை ஜூன் மாதம் மட்டும் தடுப்புக் காவலில் வைத்திருக்க நீதிபதி Jonathan Mann உத்தரவிட்டுள்ளார். Jonathan Mann தலைமையில் இந்த வழக்கு நடைபெறவுள்ளது.
குற்றவாளியின் வக்கீல், அவரை பிணையில் விடுதலை செய்யவேண்டும் என்று வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். அத்தோடு சுமாட் 7 மாத கால அவகாசத்தை நீதிபதி வழங்கியுள்ளார். காரணம் இந்த வழக்கை பொலிசார் கையாள அந்த அளவு நேரம் தேவையாக உள்ளது என்பது தான். இதில் பெரும் மர்மம் இருப்பதாகவும், என்ன நடந்தது என்பது தமக்கு சரியாகத் தெரியவில்லை என்றும், உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.