Posted in

புட்டினை கட்டிப் பிடித்த பின்ன என்ன நடந்தது ? செங்கோட்டை நிலவரம் LIVE

ரகசிய ஒப்பந்தங்கள் முடிந்தது எங்கே ?

உக்ரைன் போருக்குப் பின்னர் உலக நாடுகளின் இராஜதந்திரப் புறக்கணிப்பைச் சந்தித்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவுக்கு மேற்கொண்ட திடீர் விஜயத்தின் மூலம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். டெல்லியில் அவருக்குக் கிடைத்த அதிர்ச்சியூட்டும் ராஜ உபசரிப்பு, மேற்குலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு நேரடி சவாலை அனுப்பியுள்ளது.

340 அறைகள் கொண்ட மாளிகையில் மிரள வைத்த வரவேற்பு

வெள்ளிக்கிழமை காலை அதிபர் மாளிகையில் ராணுவ மரியாதை, பீரங்கிக் குண்டுகளின் முழக்கம், குதிரைப்படை அணிவகுப்பு என டெல்லி விதித்த செங்கம்பள வரவேற்பு (Red Carpet) ரஷ்ய ஊடகங்களைத் திகைக்க வைத்தது. “340 அறைகள் கொண்ட சலவைக்கல் சிம்மாசன மாளிகையில் விளாடிமிர் புடின் எப்படி வரவேற்கப்பட்டார்!” என்று ரஷ்ய ஊடகங்கள் இதை வியந்து, வியந்து எழுதிக் கொண்டு இருக்கிறது.

டீல்கள் ரகசியமாக்கப்பட்டன: முக்கிய அறிவிப்புகள் இல்லை!

பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை, தொழில் அதிபர்கள் மாநாடு, ரஷ்யாவின் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ‘ரஷ்யா டுடே’ தொலைக்காட்சியைத் தொடங்குவது போன்ற நிகழ்வுகள் பகலில் நடந்தாலும், உலக நாடுகள் எதிர்பார்த்த மிகப் பெரிய ராணுவ மற்றும் எண்ணெய் ஒப்பந்தங்கள் எதுவும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்காவை மிரட்டிய ஆயில் டீல் சவால்!

ரஷ்யாவின் பொருளாதாரத் தடைக்கு மத்தியில், இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குவது அமெரிக்காவிற்குப் பெரும் எரிச்சலைக் கொடுத்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம், இந்தியாவின் மீது கடும் வரிகளை விதித்து ரஷ்ய எரிசக்தி கொள்முதலை நிறுத்த அழுத்தம் கொடுத்து வந்தது.

ஆனால், புடின் டெல்லியில், “இந்தியாவுக்குத் தடையற்ற எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த மாஸ்கோ தயாராக உள்ளது” என்று பகிரங்கமாக அறிவித்தது, அமெரிக்காவின் அழுத்தத்தை இந்தியாவும் ரஷ்யாவும் முற்றிலும் நிராகரித்ததைக் காட்டுகிறது! இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

ராணுவ ஒப்பந்தங்கள் எங்கே? ரகசிய இரவு விருந்தில் வியூகம்!

அதிநவீன ரஷ்யப் போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா கொள்முதல் செய்யுமா என்று உலகமே எதிர்பார்த்த நிலையில், எந்த ராணுவ ஒப்பந்தமும் அறிவிக்கப்படவில்லை. இது வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ இடையேயான உறவை இந்தியா சமன் செய்கிறது என்பதன் அடையாளமாகத் தெரிந்தாலும், உண்மையில் இந்த முக்கிய முடிவுகள் வேறு எங்கு எடுக்கப்பட்டன என்பது தான் இப்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இரவில் நடந்த ரகசிய விருந்தில் முக்கிய முடிவுகள்

ரஷ்ய அதிபரின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகரான யூரி உஷாகோவ், புடின் மற்றும் மோடி இடையேயான “அதிகாரப்பூர்வமற்ற இரவு உணவு” தான் இந்த விஜயத்தின் மிக முக்கியமான புள்ளி என்று கூறியுள்ளார்.

“இதுபோன்ற ரகசியமான நேருக்கு நேர் சந்திப்புகளின் போதுதான் இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச நிலைமை குறித்த அவசரமான, மிகவும் முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சினைகள் விவாதிக்கப்படும். இந்த வகையான கூட்டங்களில்தான் அரசியல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன!”

உஷாகோவ் கூறியதன் மூலம், பகலில் பகட்டான நிகழ்ச்சிகள் நடந்தாலும், ட்ரம்ப் நிர்வாகத்தை மீறி இந்தியா எடுக்கும் மிக முக்கியமான முடிவுகளுக்கான ரகசிய ஒப்பந்தங்கள் அனைத்தும் மோடி மற்றும் புடின் இடையேயான அந்த இரவு விருந்தில் தான் இறுதி செய்யப்பட்டன என்பது உறுதியாகிறது!